ஞாயிற்றின் இளங்கதிர் மழலையின் மொழிபோல் இதமாக இருந்தது. புதுமண் சட்டியில் குப்பைமேனி இலையை அரைத்து சாறு பிழிந்து வடிகட்டிய சாறு வெளியில்படும் படி வைக்கப்பட்டிருந்தது. மனதில் வேதனையுடன் ஒரு தந்தையின் உள்ளம் பொருமிகொண்டிருந்து. சட்டியில் இருந்த பச்சிலை மருந்தை முகர்ந்து பார்த்து, இதை என் மகள் எப்படி குடிப்பாள் என்று வேதனயோடு கலங்கி கண்ளோடு அமர்ந்திருந்தார். சுற்றியிருந்த அவருடைய உறவினர்கள் இப்படி கூடவா இருப்பார்கள் பெண் மேல் பாசம் இருக்க வேண்டியதுதான் நாங்கள் என்ன விஷத்தையா கொடுக்கிறோம் என்று திட்டிகொண்டே சற்று சூடுகண்ட மருந்தை எடுத்துக்கொடுத்தனர். அவள் குடிடத்தபோது அவள் தந்தை அழுத அழுகை, அந்த பாசம் மறக்கமுடியாத நினைவு. எப்படி மறக்கமுடியும் ஒரு தந்தை பிம்பம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரொரு விதமான அனுபவங்களைக் கொடுத்திருக்கும்.எங்களுக்கு அமைந்த அப்பா ஒரு நல்ல தோழனாய், வழிகாட்டியாய்,ஆசானாய் அனைத்துமாய் இருந்தவர்.அவர் எங்களுக்குள் ஏற்படுத்தி சென்ற சலனங்கள் சொல்லி மளாது. 2000 த்தில் எங்களைப் புறவயமாக பிரிந்தாரே ஒழிய எங்கள் ஆன்மா இருக்கும் வரை அவர் நினைவுகள் அழியாது.
அப்பாவின் நினைவுகள் தொடரும்...
அப்பாவின் நினைவுகள் தொடரும்...