Tuesday, October 30, 2012

செல்லியம்மன் திருவிழா























அசுர நாகரிக வளர்ச்சியின் ஊடே,கிராமங்களும் தங்கள் நிறத்தினை மாற்றிக் கொள்ள தொடங்கினாலும் , சில பழமையான விழாக்களால் கிராமங்கள் இன்னும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுதான் உள்ளது.நாட்டுப்புற வழிபாடுகள் என்பது தொன்மை வாய்ந்தது. இவ்வழிபாடுக்ள மூலமாக பழமைகள் போற்றப்படுகின்றது.காக்கப்படுகின்றது என்றும் கூறலாம்.

வரலாற்றுச் சிறப்பைத் தன்னகத்தே கொண்டு , உலகின் அச்சானியாகத் திகழக் கூடிய உழவுத் தொழிலை மையமாகக் கொண்டு ,கலைகளின் பிறப்பிடமாய் திகழக் கூடிய தஞ்சை தரணினியின் ஒரு சிறு பகுதியாக உள்ளதுதான் ஒக்கநாடு கீழையூர் என்னும் கிராமம். இங்கு உழவுத் தொழில் தான் முக்கிய தொழிலாகவுள்ளது.ஆண்டு தோறும் உழைத்துக் களைத்த மக்களுக்கு , அவர்கள் கொண்டாடும் விழாக்களே ஒரு மாற்றாகவுள்ளது.இந்த கிராமத்தில் நாகரிக வளர்ச்சியின் தாக்கம் தலைக்காட்டத் தொடங்கியிருந்தாலும்,இன்னும் பழமை மாறாமல் விழாக்களை நடத்திக் கொண்டுள்ளனர். 

Friday, October 26, 2012

ஊரும் பேரும்...


ஒக்கூர் என்று அழைக்கப்படும் ஒக்கநாடு கீழையூர் தஞ்சையிலிருந்து 30 மைல் தூரத்தில் உள்ள ஊர். ஒரத்தநாட்டிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. அங்கு விவசாயம் முக்கியத் தொழில். அந்த ஊரின் தோற்றம் குறித்து பல்வேறு கதைகள் உள்ளன.